திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா எம் கே கமலக்கண்ணன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது

0 81

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியன் அலுவலக திறப்பு விழா திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள நல்லி சில்க்ஸ் மாடியில்

11-2-26 அன்று நடைபெற உள்ளது..

 

திறப்பு விழாவில் திருச்சி மாவட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள்.

 

வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள்.

 

ரியல் எஸ்டேட் நில முகவர்கள்.

 

ரியல் எஸ்டேட் ப்ரமோட்டர்ஸ் பில்டர்ஸ்.

என கட்டுமானத்துறை சார்ந்தவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்..

 

விழாவில் தலைமை பொறுப்பேற்று மாநிலத் தலைவர் எம்.கே கமலக்கண்ணன் அவர்களுடன் மாநில செயலாளர் ஆர்.ஸ்டாலின்

மாநில ஒருங்கிணைப்பாளர் & பொருளாளர் மலேசியா மணி

கூடுதல் செயலாளர் டி‌

.பக்கிரி சாமி ஆகியோர்கள் விழா பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..

 

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் செயல்படும்

 

அலுவலகம் என்பது சங்கத்தின் உறுப்பினர்காகவே திறக்கப்படுகிறது..

 

அலுவலகம் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்..

 

ரியல் எஸ்டேட் தொழிலில் முகவர்களாகஉள்ளவர்கள்

இதுவரை இடம் சம்மந்தமாக வியாபாரங்கள் பேசும்போது டீக்கடையிலோ அல்லது ஹோட்டலிலயோ வியாபாரத்தை பேசுகிறார்கள்..

 

இதனால் இடம் வாங்குவருக்கும் விற்போக்கும் வாடிக்கையாளர்களுக்கு நண்பக தன்மை இல்லாமல் போகிறது..

 

ஆகவே நில வணிகர்களுக்காகவும் நில முகவர்களுக்காவும் அங்கீகாரம் தரவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும்

அலுவலகம் செயல்படும்

 

மேற்படி அலுவலகம் உறுப்பினர்களுக்கானதே என்பதை நினைவூட்டுகிறோம்.

 

சங்க உறுப்பினர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை அலுவலகத்திற்கு அழைத்து தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் டேபிள் சேர் அமர்ந்து வியாபாரத்தை பேசலாம். சம்பாதிக்கலாம்..

 

இதற்காக உறுப்பினர்களிடம் எந்த தொகையும் வசூலிக்கப்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்….

மேலும் சங்கத்தின் வளர்ச்சிக்காக சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எம்கே கமலக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.