இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சிறப்பு தீவிர திருத்த பணி

0 17

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கண்ட சிறப்பு தீவிர திருத்த பணியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 2543 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி, அதனை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து மீள பெற்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் தொலைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 23,68,967 எண்ணிக்கையிலான மொத்த வாக்காளர்களில், நாளது தேதிவரை 22,74,733 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 15,38,829 எண்ணிக்கையிலான வாக்காளர்களிடமிருந்து மீள பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட முன்நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குசாவடி நிலை அலுவலர்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்நேர்வில், முன்நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ள பாகங்களில் பணி முன்னேற்றத்தினை விரைவுபடுத்திட, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 மண்டல அலுவலர்கள் வீதம் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 45 மண்டல அலுவலர்கள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 4

 

இந்நேர்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களாகிய தாங்கள் கணக்கீட்டு படிவத்தில் கோரப்பட்டுள்ள வாக்காளர்களது அல்லது வாக்காளர்களின் உறவினர்களின் 2002/2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விபரங்கள் தெரியவில்லை என்ற காரணத்திற்காக நாளது தேதிவரை கணக்கீட்டு படிவத்தினை பூர்த்தி செய்து மீள வாக்குசாவடி நிலை அலுவலவலர்களிடம் சமர்பிக்காத வாக்காளர்கள் கணக்கீட்டு படிவத்தில் அடிப்படை விபரங்களை மட்டும் பூர்த்தி செய்து படிவத்தின் இறுதியில் கையொப்பமிட்டு வாக்குசாவடி நிலை அலுவலரிடம் மீள வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும் பகுதியளவு முன்நிரப்பப்பட்ட படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்திடும் பணியினை விரைவுபடுத்தும் பொருட்டு, 141-திருச்சிராப்பள்ளி (கிழக்கு) மற்றும் 143-இலால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நேராய்வு மேற்கொண்டு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.