விஜய்யை நேரில் சந்தித்து தவெக வில் இணைந்த நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி

0 55

காது கொடுத்து கேட்க முடியாத.. அளவிற்கு திமுகவில் திட்டினாங்க! தவெகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் பளீர்

திமுகவினர் என்னுடைய வயிற்றில் அடிப்பது மாதிரி என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். பேட்டி ஒன்றில் விஜயை பாராட்டி பேசினேன். அதற்கு என்னை ஓரம் கட்டினார்கள். அந்த நாளில் இருந்து எனக்கு நெருக்கடி கொடுத்தனர். என்னை மோசமாக நடத்தினார்கள். என்னை கேவலமாக திட்டினார்கள்., என்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். விஜயை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். ஊடகங்களிடம் இன்று பேசிய அவர், 6 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் இணைத்துக் கொள்ளாமல் இருந்தேன்; பெரியார், அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன் நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார். காது கொடுத்து கேட்க முடியாத மாதிரி திமுகவில் இருந்து பேசினார்கள்.

நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகம்

திமுகவினர் என்னுடைய வயிற்றில் அடிப்பது மாதிரி என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். பேட்டி ஒன்றில் விஜயை பாராட்டி பேசினேன். அதற்கு என்னை ஓரம் கட்டினார்கள். அந்த நாளில் இருந்து எனக்கு நெருக்கடி கொடுத்தனர். என்னை மோசமாக நடத்தினார்கள். என்னை கேவலமாக திட்டினார்கள்.

திமுகவின் அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு ஒதுக்கினார்கள். ஆனால் எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. யார் மீதும் வருத்தம் இல்லை. யாரையும் நான் திட்ட போவது இல்லை. விஜய் என்னை பார்த்த போது.. நன்றாக நடத்தினார். நான் உங்கள் ரசிகன் என்றார். நான் உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களில் இருந்து விடுபட்டு உள்ளேன். விஜயை பார்த்ததும் புதிதாக பிறந்தது போல உணருகிறேன்.

விஜய் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுகிறார். பெரியாரை முன்னிறுத்துகிறார். அவருடன் இருப்பது உற்சாகம் தருகிறது, என்று நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டு உள்ளார்.

தவெக சூப்பர் – விஜய்

சமீபத்தில் பல்வேறு ஊடகங்களுக்கு திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பேட்டியின் சாராம்சம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் தனது பேச்சில், அதிமுக தமிழ்நாட்டில் பலமாக இல்லை. அதிமுகவின் பலம் கடந்த சில தேர்தல்களாக குறைந்துவிட்டது. முக்கியமாக சில இடங்களில் அதிமுக 3ம் இடத்திற்கு சென்றுள்ளது. சில இடங்களில் 4ம் இடத்திற்கு சென்றுள்ளது. அந்த அளவிற்கு மோசமான நிலையில் அதிமுக உள்ளது. அப்படி இருக்க அதிமுக – திமுக இடையே எப்படி மோதல் இருக்கும். அதிமுக திமுகவை எதிர்க்கும் அளவிற்கு இல்லை. அதிமுகவிற்கு அவ்வளவு கள வலிமை இப்போது இல்லை. அதை செய்வதற்கான வலிமை அதிமுகவிடம் இல்லை.

இன்னொரு பக்கம் தவெக அதிமுகவை விட வலிமையாக உள்ளது. தவெக திமுகவை எதிர்க்கும் நிலையில் உள்ளது. திமுக என்னை மேடை பேச்சுக்கு அழைக்கும் நிலை இருந்தது. ஆனால் நான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக பேசுவதால் என்னை திமுக அழைக்கவில்லை. திமுகவிற்கு போட்டியே தவெகதான். பல தொகுதிகளில் திமுகவுக்கும், தவெகவுக்கும் நேரடி போட்டி. களநிலவரம் அப்படித்தான் இருக்கிறது. தவெகவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று நான் கூறியதால் திமுக என்னை ஒதுக்கி உள்ளது.

நாஞ்சில் சம்பத் – விஜய்க்கு ஆதரவு

திமுக என்னை அவமானப்படுத்துகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவெக அழைத்தால் செல்வேன். அவர்களுக்காக பேச செல்வேன். ஆனால் அரசியல் செய்ய வலிமை இல்லை. எனக்கு வயதாகிவிட்டது. ஆனால் திமுகவை எங்கும் எதிர்த்து பேச மாட்டேன். திமுக உடன் துவேசம் கொண்டு பே ச மாட்டேன்.

விஜயை பாராட்டும் நாஞ்சில் சம்பத்

தவெகவின் கொள்கை பிடித்து இருக்கிறது. விஜய் அரசியலை தொடங்கிய விதம் பிடித்து இருக்கிறது. தவெக ஒரு திராவிட கட்சிதான். அவர்கள் திராவிட சித்தாந்தம் கொண்ட கட்சிதான். தவெகவின் கொள்கை தலைவர்களாக பெரியார், அண்ணா இருக்கிறார்கள். அதனால் தவெக திராவிட கட்சிதான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அரசியல் செய்யும் கட்சிதான் விஜயின் கட்சி. எனக்கு இது மகிழ்ச்சியை கொடுக்கிறது. விஜயின் நடவடிக்கை நம்பிக்கை அளிக்கிறது. சட்டமன்ற தேர்தலில் விஜய் பாஜகவை எதிர்க்க வேண்டியது திமுகதான். திமுகவை அதனால்தான் பந்து போல விஜய் உதைக்கிறார். விஜய் அதனால் திமுகவை எதிர்க்கிறார். இதில் தவறு எதுவும் இல்லை., என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.