மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்பி அருண் நேரு சந்தித்து பேசியது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார் .
இந்நிலையில், அமலாக்கத்துறை கடிதத்துக்கு பயந்து பாஜக நிர்வாகிகளை சந்தித்தத்தாக தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளங்களில் விமர்சித்த நிலையில், சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார் எம்பி அருண் நேரு. அதில், கடன் வாங்கும் பொது மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் சேகரிக்க வேண்டும் எனவும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குடும்பங்களுக்கு பண தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே நிதியமைச்சர் சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், திமுக எம்பியும், கேஎன் நேருவின் மகனுமான அருண் நேரு நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அவரிடம் மனு அளித்தார்.
இது தொடர்பான பதிவை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியீட்ட நிலையில் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உள்ளிட்டோர் விமர்சித்தனர். இதனை அடுத்து அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்ததாக உள்ளிட்ட கட்சியினர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
இந்த நிலையில் தொகுதி மக்கள் நலனுக்காகவே மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக விளக்கம் அளித்திருக்கிறார் அருண். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,” புதுதில்லியில், பொதுமக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் இரண்டு முக்கிய விவகாரங்கள் குறித்து நடவடிக்க எடுக்க வலியுறுத்துவதற்காக நான் மாண்புமிகு நிதியமைச்சரைச் சந்தித்தேன். கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் இந்தியா முழுவதும் உள்ள கடன் வாங்கும் பொதுமக்களுக்கு நியாயம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
பிஏசிஎல் லிமிட். மோசடியில் தாங்கள் வியர்வை சிந்தி சேமித்த சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், குறிப்பாக துறையூர் பெண்களுக்கும், விரைவான பணத்தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்” என கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் மேலும் சில கோரிக்கைகள் குறித்தும் அருண் நேரு எம்பி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் காப்பீடு வழங்கும் வகையில் எல்ஐசி உடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அருண் திட்டமிட்டு இருக்கிறார். அது தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் திட்டமிட்டு அதிமுக, தவெகவினர் அமலாக்கத்துறை சோதனையுடன் அருண்- நிர்மலா சீதாராமன் சந்திப்பை தொடர்புபடுத்தி பேசி வருவதாகவும் உண்மையில் தொகுதி மக்களின் கனவை நனக்காகவே அவர் மத்திய அமைச்சரை சந்தித்தார் என்கின்றனர்.