அயோத்தி, குருஷேத்ரா செல்லும் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 25 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கும், நவம்பர் 26 ஆம் தேதி குருக்ஷேத்ராவுக்கும் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 25 அன்று, பிரதமர் மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கொடியேற்றுவார். இந்த நிகழ்வு ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கோபுரத்தில் 21 அடி உயர கொடியை பிரதமர் மோடி ஏற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ராம் விவாஹ் பஞ்சமியுடன் ஒத்துப்போகிறது. கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, பிரதமரின் இந்த வருகையை “வரலாற்று சிறப்புமிக்கது” என்று வர்ணித்துள்ளார். நவம்பர் 25 அன்று பொதுமக்கள் ராம் லல்லாவை தரிசிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
குருக்ஷேத்ரா பயணத்தைப் பற்றிய விரிவான தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.