தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் L.M.P.C. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ், மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.அழகுமீனா, சட்டமன்ற உறுப்பினர்கள்,
அரசு துறை அதிகாரிகள் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.