வடக்கு மண்டல ஐ ஜி அஸ்ரா கார்க் செய்தியாளர் சந்திப்பு

0 34

திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர் சந்திப்பு

 

சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி அல்ல. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்துள்ளார்.

 

கைதான நால்வரில் மூவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

 

ஒருவர், சிறார் நீதிக்குழு அறிவுறுத்தலின்படி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

 

ரயில் பயணத்தில் சாதாரணமாக சூரஜ் பார்த்ததை ‘முறைத்து சரிக்கிறாயா?’ என ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் நடந்துள்ளது.

 

பட்டாக்கத்தியை சிறார்கள் அவர்களது வீட்டில் இருந்து எடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. தொடர்ந்து விசாரணையும், ஆய்வும் நடைபெற்று வருகிறது.

 

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறானது. தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டதாக பரவும் தவறானது. அவர் பத்திரமாக உள்ளார்.

 

தாக்குதல் நடத்திய சிறார்களிடம் இருந்து 2 பட்டாக் கத்திகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

இது சமூக வலைதளங்களின் காலம் என்பதை போலீசாரும் உணர்ந்துள்ளோம்.

 

மாணவர்கள் மோதல், சிறார்களின் ரீல்ஸ்கள் கண்காணிக்கப்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

நிறைய வழக்குகளில், மாணவர்களின் எதிர்காலம் பாதித்துவிடக் கூடாது என பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கிறோம்.

 

சிறார் விவகாரங்களில் எல்லாவற்றுக்கும் சட்ட நடவடிக்கையே தீர்வு என போலீசார் செயல்பட முடியாது

 

– அஸ்ரா கார்க், வடக்கு மண்டல ஐ.ஜி.

Leave A Reply

Your email address will not be published.