திருச்சி காந்தி மார்க் கெட்டில் சில்லறை விற் பனை கடைகளை இட மாற்றக்கூடாது என்று கலெக்டரிடம் இன்று வியாபாரிகள் மனு அளித்தனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இல வச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, உதவித் தொகை, வங்கி கடன்
கலெக்டரிடம் வியாபாரிகள் மனு
மற்றும் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனுக்களை மக்கள் அளித்தனர்.
காந்தி மார்க்கெட் தரைக்கடை காய் கறி வியாபாரிகள் சங்கத்தினர் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் மனு அளித்த னர். அதில்,நூற்றாண்டை கடந்து பொதுமக்கள், வியாபாரிகளுக்கு திருச்சி காந்தி மார்க்கெட் சேவை யாற்றி இயங்கி வருகிறது. எனவே இங்கு இயங்கி வரும் சில்லறை தரைக்கடைகளை மாற்றாமல் தற் போதைய இடத்திலேயே தொடர அனுமதி வழங்க வேண்டும். மொத்த வியாபாரிகளின் கடைகள் மாற் றப்பட்டாலும் சில்லறை வியாபாரிகள் காந்தி மார்க் கெட்டிலேயே இருப்பது பொதுமக்களின் வசதிக்கு மிக அவசியமான ஒன்றாகும். எனவே சில்லறை வியாபாரிகளின் கடை களை மாற்றமல் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் சாலை ஓரத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டியும் திருச்சி காந்தி மார்க்கெட் சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்