பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆய்வு
மாண்புமிகு மேயர் மு.
அன்பழகன் அவர்கள் இன்று (26.11.2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-I – கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்படுகிறது.
சாலையின் மொத்த நீளம் – 2 கிலோமீட்டர்
சாலை கட்டமைப்பு 2 வழி சாலைகள்,
சாலையின் அகலம் 10 மீட்டர்
தரைமட்ட சாலை நீளம் – 0.990 கிலோமீட்டர்,
உயர்மட்ட சாலை நீளம் – 1.370 கிலோமீட்டர்,
இரயில்வே உயர்மட்ட சாலை – 0.06409 கிலோமீட்டர் ,
தாங்குசுவர் நீளம் – 2.250 கி.மீ. (சாலையின் இரு பகுதிகளிலும்)
நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைப்பு – 1.290 கி.மீ.
இத்திட்டப்பணி 2026 ம் ஆண்டு முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வில் செயற் பொறியாளர் திரு .கே. எஸ். பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் திரு .வேல்முருகன் மண்டல தலைவர் துர்காதேவி ,மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.