திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக RPF உதவி மேலாண்மை அமைப்பு தொடக்கம்
இன்று 26.11.2025, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அவர்கள், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி மேலாண்மை அமைப்பைத் தொடங்கி வைத்ததார். இது பயணிகள் தங்கள் பிரச்சினைகளை ஒரு செயலியைப் பயன்படுத்தித் தெரிவிக்க உதவும் வசதியாகும்.
இதற்காக திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சி புனித ஜோசப் மாணவர்களான நோயல் ஷிபு, ஜோ ராகேஷ் மற்றும் மரியா எஃப்ரான் ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்ட பாதுகாப்பான முறையில் ஒரு டேப்லெட் (திரை) போன்ற அமைப்பு ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் PF-1 இன் முன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் திரு.பிரசாந்த் யாதவ் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர் தலைமையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு.அஜய் குமார் மற்றும் காவலர்கள் போதுமான பாதுகாப்பை உறுதி செய்தனர்.
திரு.பாலக் ராம் நேகி, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அவர்கள்,
பயணிக்கும் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் எடுத்த முயற்சிகளை பாராட்டினார்.