அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி – அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் திரு.எல் ரெக்ஸ் தலைமையில் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடந்தது. நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணைப்பொருளாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் முன்னாள் மத்திய மந்திரி விஜய் இந்தர் சிங்கிலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி, புதிய மாவட்ட தலைவராக விரும்புபவர்களிடம் விருப்பமனு வாங்கினார். மாவட்ட பொறுப்புகளுக்கு குற்றபின்னணி உள்ளவர்களை நியமிக்க கூடாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் புதிய மாவட்ட தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிக்கும் என தெரிவித்தார்.
நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ் எஸ் ராமசுப்பு எம்பி, ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ பி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அவர்கள் வரவேற்று பேசினார். செயற்குழு உறுப்பினர் ஜோசப் லூயிஸ், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாவட்ட பொருளாளர் முரளி, மாநில சிறுபான்மை பிரிவு முதன்மை துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், இராணுவ அணி ராஜசேகரன், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, மாநில நிர்வாகிகள் வக்கீல் சரவணன், ஜிகே முரளி, இளங்கோ, மாவட்ட நிர்வாகிகள் படேல், விக்னேஷ், அன்பு ஆறுமுகம், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, காட்டூர் ராஜா டேனியல் ராய், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, மார்க்கெட் பகதூர்ஷா,திருவனைக்கோவில் தர்மேஷ், உறையூர் பாக்கியராஜ், சுப்ரமணியப்புறம் எட்வின், அரியமங்கலம் அழகர், தில்லைநகர் ராகவேந்திரா, கிருஷ்ணா, வரகனேரி இஸ்மாயில், பஞ்சப்பூர் மணிவேல், ஏர்போர்ட் கனகராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், பொன்மலை பாலு, அணி நிர்வாகிகள் நெசவாளர் அணி சேகர், ஐடி பிரிவு லோகேஷ், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல், அபுதாஹிர், சரவணன் சோமு, மகிளா காங்கிரஸ் ஷீலா செளஸ், அஞ்சு, கோகிலா, சிறும்பான்மை பிரிவு பஜார் மைதீன், அமைப்பு சாரா மகேந்திரன், சம்பத், கலைப்பிரிவு அருள், எஸ்சி பிரிவு கலியபெருமாள், என் ஜி ஓ கண்ணன், ஓபிசி பிரிவு ரியாஸ், சம்பத், குத்தூஸ், ஜெகதீஸ்வரி, ரமேஷ் சந்திரன், செல்வகுமார், அண்ணாசிலை விக்டர், வார்டு தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.